இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு இரண்டு முறை இந்தியா வர போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக அவர் இந்தியா வரவில்லை.தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்து உலகம் முழுவதும் இயல்புநிலை திரும்பி வருவதையடுத்து, இந்த மாத இறுதியில் இந்தியா வர அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ள போரிஸ் ஜான்சன் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரமர் அலுவலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.