Advertisment

''மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும்'' - மோடி ட்வீட்

 '' Bring every color of happiness '' - Modi tweets!

நாட்டின் பல்வேறு இடங்களில் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமாகக்கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் பிருந்தாவனத்தில் உள்ள பங்கி பிஹாரி கோவிலில் மக்கள் வண்ணப்பொடிகளைத் தூவி கொண்டாடி வருகின்றனர். அதேபோல் மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment

ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர்பதிவில், 'வண்ணங்களின் திருவிழாவான ஹோலி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும். ஹோலி பண்டிகை பரஸ்பர அன்பு, பாசம், சகோதரத்துவத்தின் அடையாளமாகத் திகழ்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

Festivals Holi modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe