
கேரளாவில் திருமண முகூர்த்தத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பியூட்டி பார்லரில் மேக்கப் போடுவதாக சொல்லிவிட்டு வெளியே சென்ற மணப்பெண் காதலனோடு ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கள்ளம்பலம் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவருக்கும் இடவா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனையடுத்து நேற்று ஒரு தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. முகூர்த்த நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மணப்பெண் மேக்கப் போடுவதற்காக பியூட்டி பார்லர் வரை சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். மணப்பெண் மேக்கப் போட்டுக் கொண்டு வருவார் என திருமண மண்டபத்தில் மாப்பிள்ளையும், உறவினர்களும் காத்திருந்தனர். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும்மணப்பெண் வராததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்ட மணப்பெண், தனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை என்பதால் தன்னுடைய காதலனுடன் சென்றுவிட்டேன்' எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு மணப்பெண்ணின் தாய், தந்தை எனஇருவரும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தனர். ஆனால், மணமகன் தரப்போ நிலைமையைப் புரிந்து கொண்டுஎந்த பிரச்சனையும் செய்யாமல் சோகத்துடன் அங்கிருந்து கிளம்பினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)