இதுக்காகவா திருமணத்தை நிறுத்துவாங்க! மணப்பெண் கூறிய காரணத்தை கேட்டு அதிர்ந்த உறவினர்கள்!!

jlk

உத்தரப் பிரதேசத்தில் திருமணத்தை நிறுத்த மணப்பெண் கூறிய காரணத்தைக் கேட்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இந்தியாவில் சில வருடங்களாக மணமக்கள் திருமண மேடைக்கு வந்த பிறகும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து திருமணங்களை நிறுத்துவது அவ்வப்போது நடந்து வருகிறது. மதுப் பழக்கம், குட்கா பயன்படுத்துதல், காதல் போன்ற பல்வேறு காரணங்களால் திருமணங்கள் பாதியில் நின்று போனது தொடர்பாக பல செய்திகள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் இந்த மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. அந்த வகையில் உ.பி மாநிலம் மங்கல்பூர் பகுதியில் இன்று நடைபெறுவதாக இருந்த திருமணத்தை மணப்பெண் திடீரென நிறுத்தியதும், அதற்கு அந்த பெண் கூறிய காரணமும் அங்கிருந்த உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உ.பி மாநிலம் மங்கல்பூரில் இன்று நடைபெறவிருந்த தனது திருமணத்தை மணமேடையில் இருக்கும்போது நிறுத்தியுள்ளார் இளம்பெண் ஒருவர். இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் அங்கிருந்த உறவினர்கள் விசாரித்த போது, அந்த பெண், " இந்த திருமணம் என் வாழ்வில் மிக முக்கியமான ஒரு தருணம். ஆனால் மணமகன் வீட்டில் இந்த நிகழ்ச்சியைப் புகைப்படம் எடுக்க ஒரு புகைப்பட கலைஞர்களையும் அழைக்கவில்லை. இதுவே செய்ய முடியாத ஒரு நபருடன் நான் இனி வரும் காலத்தை எப்படி வாழ்வேன். இவருடன் வாழ எனக்கு விருப்பமில்லை. அதனால் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினேன்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து, திருமணம் நின்றுபோவது உறுதியானதை தொடர்ந்து, காவல் நிலையம் சென்ற இரு குடும்பத்தாரும் தங்களுக்கான திருமண செலவைப் பிரித்து பங்கு போட்டுக்கொண்டனர்.

marriage uttrapradesh
இதையும் படியுங்கள்
Subscribe