திருமணம் ஆன பெண்கள் பிறந்த வீட்டை வருவது என்பது மிகவும் கடினமான விஷயம். பலர் கண்ணீருடனே பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்வார்கள். அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பெயர், ஊர் குறிப்பிடாமல் வெளிவந்துள்ள அந்த வீடியோவில் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் அவரின் மனைவியை பெற்றோரிடம் இருந்து அழைத்து சென்றமுறை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் மணப்பெண் பெற்றோர்களை பிரிந்து வர மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவர், சற்றும் தாமதிக்காமல் அவரை தன்னுடைய கைகளால் மணப்பெண்ணை தூக்கிச்சென்று காரில் அமர்த்தியுள்ளார். இந்த வீடியோ இமையதளங்களில் வைரலாகி வருகிறது.