bride refused to marry while tying the thali

தாலி கட்டும் நேரத்தில்திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மணப்பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Advertisment

கர்நாடக மாநிலம் சிக்கப்யலாடகெரே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் திப்பரெட்டிகலியே பகுதியைச் சேர்ந்த யமுனாவிற்கும் பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து, கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 7 ஆம் தேதிஇருவருக்கும் சிக்கப்யலாடகெரேவில் திருமணம் நடைபெறுவதாக இருந்தநிலையில், மணமேடையில் மணமகன் தாலி கட்ட முயன்றபோது, திடீரென எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று மணமகள் கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் பெண்ணைசமாதானம் செய்து திருமணத்தை நடத்த முயன்றபோது, பெண் பிடிவாதமாக எனக்கு திருமணம் வேண்டாம் நான் படிக்கணும் என்று கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisment

மணப்பெண் திருமணத்திற்கு முதலில் சம்மதம் தெரிவித்துள்ளார். பின்பு அவருக்கு திருமணம் நடக்கவிருந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரசுக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படிக்க கல்லூரியில் சீட் கிடைத்ததால், தனது பெற்றோரிடம் தான் படிக்க வேண்டும் என்று கூறி திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் மணப்பெண்ணின் பேச்சை கேட்காமல் திருமணத்தை நடத்தவிருந்ததாகவும், அதனால்தான் தாலி கட்ட மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.