Brian Singh re-elected Manipur Chief Minister

மணிப்பூர் மாநில முதலமைச்சராக பிரேன் சிங் மீண்டும் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

நடந்து முடிந்த மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பா.ஜ.க. 32 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. இதைத் தொடர்ந்து, தலைநகர் இம்பாலில் பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர்களான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று (20/03/2022) கூட்டம் நடைபெற்றது.

Advertisment

Brian Singh re-elected Manipur Chief Minister

இக்கூட்டத்தில், பா.ஜ.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக பிரேன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டடார். அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் மணிப்பூர் ஆளுநர் இல.கணேஷணைச் சந்தித்த பிரேன் சிங், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி, மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமைக் கோரினார்.

இதைத் தொடர்ந்து, பிரேன் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment