Brent crude traded at $ 118 a barrel!

Advertisment

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்திருப்பதன் எதிரொலியாக, பிரெண்ட் கச்சா சுமார் 7% உயர்ந்திருக்கிறது.

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா ஒரு பீப்பாய் 7.57 டாலர் அதிகரித்து, 118 டாலரில் வர்த்தகமாகிறது. உக்ரைன் மீதான தற்காலிக போர் நிறுத்தம் எந்த முன்னேற்றத்தையும் தரவில்லை எனத் தெரிவித்துள்ள ரஷ்யா, மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

இதற்கிடையில், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு தடை விதித்தால், சர்வதேச சந்தையில் அதன் விலை 150 டாலர் வரை உயர வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றன. எனவே, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

தற்போது ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.