Boys misbehave young girl using AI technology

மத்திய பிரதேசம் மாநிலம் ஷதோல் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி நர்சிங் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் வாடகை வீட்டின் உரிமையாளரின் மகனான சிறுவன், இளம் பெண் வீட்டில் தனியாக இருக்கும் போது அவருக்குத் தெரியாமல் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். பின்பு ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்துள்ளார்.

Advertisment

இதையடுத்து ஆபாசமாகச் சித்தரித்த புகைப்படத்தை இளம்பெண்ணிடம் காட்டியுள்ளார். அதைப் பார்த்து இளம்பெண் அதிர்ச்சியடையவே, தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இந்த நிலையில் சிறுவன் தனது நண்பரான மற்றொரு சிறுவனுடன் சேர்ந்து இளம்பெண்ணிடம் ஆபாசமாக சித்தரித்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து இளம்பெண் கோத்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில், இளம்பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவரை மிரட்டி வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதன் பின் இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.