A boyfriend who gave an ex-girlfriend a wedding gift; The groom was passed away in the explosion

Advertisment

சத்தீஸ்கர் மாநிலத்தில் முன்னாள் காதலியின் திருமணப் பரிசாக கொடுத்த பொருள் வெடித்ததில் மணமகன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் சமரி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஹேமேந்திரா மேராவி. 22 வயதான மேராவிக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி திருமணம் நடந்தது. அப்போது திருமணப் பரிசாக கொடுக்கப்பட்ட ஹோம் தியேட்டர் வெடித்தது. இதனால் நிகழ்விடத்திலேயே புது மாப்பிள்ளை உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த சகோதரரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவரது சகோதரரும் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்தனர். அதில் ஹோம் தியேட்டரில் வெடிகுண்டு வைத்து பரிசாக வழங்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் ஹோம் தியேட்டரை பரிசாக கொடுத்தவரை பிடித்து விசாரித்தனர்.

Advertisment

அவரிடம் விசாரித்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.சர்ஜூ என பெயர் கொண்ட அவர் மணப்பெண்ணின் முன்னாள் காதலர் எனத்தெரியவந்தது. தன்னை விடுத்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக சர்ஜூ வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.