/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/997_46.jpg)
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை இளைஞர் ஒருவர் 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்கள் வைத்து பின் உடல் பாகங்களை டெல்லி முழுவதும் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச்சேர்ந்த அஃப்தப் அமீன் பூனாவாலா அங்குள்ளபிரபல கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது அவருடன் பணியாற்றி வந்த ஷ்ரத்தா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே இருவருக்கிடையில் காதல் மலர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்தக் காதல் விவகாரம் ஷ்ரத்தாவின் பெற்றோருக்குத்தெரிய வர, அவர்கள் அஃப்தப் - ஷ்ரத்தாவின் காதலுக்குஎதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் டெல்லிக்குக் குடிபெயர்ந்த இருவரும் மெஹ்ராலி என்ற பகுதியில் தனி வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
இதையடுத்துஷ்ரத்தா தனது குடும்பத்தினருடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துள்ளார். பலமுறை அவரது பெற்றோர்கள் தொடர்பு கொள்ள நினைத்தும் அவர்களால் முடியாமல்போனது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தின் மூலம் ஷ்ரத்தா மற்றும் அஃப்தப் இருக்கும் முகவரியை கண்டுபிடித்தஅவரது தந்தை விகாஸ் மதன், மெஹ்ராலியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். ஆனால் வீட்டுக்கு பூட்டு போட்டிருந்ததால், சந்தேகமடைந்த விகாஸ் மதன் டெல்லி போலீசில் தனது மகளை காணவில்லை என புகார் கொடுத்தார்.
இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைதொடங்கிய போலீசார், அஃப்தப்பை பிடித்து விசாரணை நடத்தினர். அதில்ஷ்ரத்தாகாதலன் அஃப்தப்பை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்ததாகவும், ஆனால் அஃப்தப்புக்கு இதில் சம்மதமில்லை என்பதாலும் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த மே 18 ஆம் தேதி இதேபோல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரமடைந்த அஃப்தப் ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். இதனையடுத்து ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, 18 நாட்கள் பிரிட்ஜில் வைத்து பின்பு டெல்லியில் உள்ள வெவ்வேறு இடங்களில்வீசியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த டெல்லி போலீஸ் அஃப்தப் மீது கொலை வழக்குப் பதிவு செய்து ஷ்ரத்தாவின் உடல் பாகங்களைத்தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)