/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1003_28.jpg)
திருமணத்தை மீறிய உறவில் பெண் தோழியை ஆண் நண்பர் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் வசித்து வருபவர் தேவிகா. இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே அதே மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவருடன் தேவிகாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சதீஷுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இந்த நிலையில் தேவிகாவிற்கும் சதீஷிற்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (16.05.2023) தேவிகாவை கழுத்தை அறுத்து கொலை செய்ததாகக் கூறி ஆவூர் காவல் நிலையத்தில் சதீஷ் சரணடைந்தார். சதீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தில், “நானும்தேவிகாவும் 9 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவில் இருந்தோம். இந்த நிலையில் எனது பெண்குழந்தை அவருக்கு பிடித்துப்போனதால் தனக்கு தந்துவிடு எனக்கேட்டார். நான் மறுத்து வந்தேன். இருப்பினும், எனது மகளைக் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்தார்.இந்த நிலையில் இருவரும் தனியார் விடுதியில் சந்தித்துக் கொண்டபோதும்குழந்தையைத்தர வேண்டும் என்று கேட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் அறையில் இருந்த கத்தியை எடுத்து ஆத்திரத்தில் தேவிகாவின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தேவிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)