/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1002_89.jpg)
36 வயது பெண்ணை 56 வயது காதலன் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 56 வயது மனோஜ் சஹானி என்பவரும்36 வயதான சரஸ்வதி வைத்தியா என்பவரும் திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்விங் டூகெதரில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், நயா நகர் காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுக்க, அதனடிப்படையில் விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்றனர். அங்குதரையில்பிளாஸ்டிக் பைகளிலும்போர்வையிலும்சுற்றப்பட்ட உடல் பாகங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவைஅனைத்தையும் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த உடல் சரஸ்வதி வைத்தியாவுடையது என்று உறுதி செய்த போலீசார், அவர் கொலை செய்யப்பட்டு அவரது உடல்மரம் அறுக்கும் இயந்திரத்தை வைத்து துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளதையும், அதில்சில பாகங்களைகுக்கரில் வைத்து வேக வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர். இதனிடையே மனோஜ் சஹானி தலைமறைவானார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில் தற்போது அவரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு எந்த தகவல் கிடைத்தாலும் தெரிவிக்கும்படியும்காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்விங் டூகெதரில் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வந்தபோது தனது காதலியை கொன்றுதுண்டு துண்டாக வெட்டில் ஃப்ரிட்ஜில் வைத்து தெற்கு டெல்லி முழுவதும் வீசிய சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் மும்பையில் நடந்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)