Skip to main content

பப்ஜி விளையாடி ரூ.10 லட்சத்தை இழந்த சிறுவன்!!

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

j

 

இந்தியாவில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சிலர் பல நவீன வழிகளை கண்டுபிடித்து தொடர்ந்து அந்த விளையாட்டை விளையாடி வருகின்றனர். இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தாயின் வங்கி கணக்கை பயன்படுத்தி பப்ஜி விளையாடி ரூபாய் 10 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. இது தொடர்பாக மகனிடம் தாய் கேட்டதற்கு, அவருடைய மகன் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு ஓட்டம்பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய தாய் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். தீவிர தேடுதலுக்குப் பிறகு அந்த சிறுவனை மீட்ட போலீசார், அறிவுரை கூறி பெற்றோரோடு அனுப்பி வைத்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சந்திரமுகி போல சூகுனா கதாபாத்திரமாக மாறிய இளைஞர்; ராணிப்பேட்டையில் பரபரப்பு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

 A youth who became a Sukuna character like Chandramukhi; Bustle in Ranipet

 

செல்போன் கேம்களில் மூழ்கி, அதனால் மனம் சிதைந்த கல்லூரி மாணவன் ஒருவன் வெறி பிடித்ததை போல் நடந்து கொண்ட சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ளது காலிவாரி கண்டிகை. இப்பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த அந்த கல்லூரி மாணவர் தனி அறையில் புகுந்துகொண்டு செல்போனில் கேம் விளையாடுவதையும் அனிமேஷன் தொடர்களை பார்ப்பதையும்  வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

 

நேற்று வரை நன்றாக இருந்த மாணவர் திடீரென செல்போன் கேமை அதிகமாக விளையாடியதால் வெறிபிடித்த நபர் போல் மாறியுள்ளார். வீட்டில் உள்ளவர்களையும் அவதூறாக பேசும் அளவிற்கு சென்றுள்ளார். 'ஏன் இப்படி பேசுகிறாய்' என கேட்க வருபவர்களை தாக்கவும் முயன்றுள்ளார். இதனால் மிரண்டுபோன இளைஞரின் தாய் அவரது கைகளை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கட்டி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவமனையில் இருப்பவர்களையும் மிரட்டும் தொனியில் பேசியதால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி அவர் கை, கால்கள் கட்டப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும் இது தொடர்பான விசாரணையில் அந்த மாணவர் ஜப்பான் அனிமேஷன் தொடர்களில் வரும் சூகுனா என்ற கதாபாத்திரம் மீது கொண்ட ஈர்ப்பால் அந்த கதாபாத்திரம் போலவே மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

 

 

Next Story

துப்பாக்கி சுடுதல் போட்டி; ஆர்வத்துடன் கலந்து கொண்ட காவல் உயர் அதிகாரிகள்!

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

police higher official games held in perambalur naranamangalam 

 

காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் உத்தரவின்படி மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணி புரிந்து வரும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் அதற்கு மேலான பதவியில் உள்ள அதிகாரிகளுக்கான மண்டல அளவிலான ரைபிள் மற்றும் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி (11.04.2023) பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் காவல்துறை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.

 

ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் ஐபிஎஸ் முதல் இடத்தையும் மற்றும் ஒட்டுமொத்தமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி முதல் இடத்தை பிடித்தார்.

 

ஒட்டுமொத்தமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் முதல் இடத்தை பிடித்தார். இதில் வெற்றி பெற்றுள்ள அதிகாரிகள் மாநில அளவிலான காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் காவல் உயர் அதிகாரிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.