A boy who came out to play with desire; Stray dog ​​bitten

தெரு நாய்களால் மனிதர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வரும் நிலையில் அது தொடர்பானகாட்சிகளும் அவ்வப்போது வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் சிறுவன் ஒருவனை தெருநாய் ஒன்று கடித்துக் குதறும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் வித்யாகிரி இலக்கல் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக வெளியான அந்த சிசிடிவி காட்சியில் வீட்டில் இருந்து சிறுவன் ஒருவன் ஆசையாசையாய் விளையாடுவதற்காக துள்ளி குதித்து வெளியே வந்த நிலையில் தெருவில் படுத்துக் கொண்டிருந்த நாய் திடீரென சிறுவனை கடித்து குதறியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் சிறுவன் தெருநாயின் தாக்குதலில் இருந்து மீட்கப்பட்டான். இந்த காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதே வித்தியாகிரி இலக்கல் பகுதியில் பார்சலில் ஹேர் டிரையர் வெடித்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதே பகுதியில் இதுபோன்ற ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment