பத்தாம் வகுப்புத்தேர்வைக் காப்பியடித்து எழுதியதோடு மட்டுமல்லாமல் மோசடி செய்வதில்பி.ஹெச்.டி. வாங்கியவன் நான்என பாஜக அமைச்சர் ஒருவர் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கர்நாடக மாநில பாஜகவின் பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு நிகழ்ச்சி ஒன்றில் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், “வகுப்பறையில் எல்லோர் முன்னிலையிலும் நான் அவமானப்படுத்தப்பட்டேன். ஒன்பதாம் வகுப்பு வரை எப்படி தேர்ச்சி பெற்றாய் என ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நான் காப்பி அடித்துத்தான் தேர்ச்சி பெற்றேன் எனத்தெரிவித்தேன். பத்தாம் வகுப்புத்தேர்வில்நான் காப்பி அடித்துத்தான் பாஸ் ஆனேன். நான் காப்பி அடிப்பதில் பிஎச்டி முடித்தவன்”என்றும் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.