Advertisment

இன்று முதல் நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி!

Vaccine

இந்தியாவில் பல மாநிலங்களில்கரோனாகட்டுப்பாடுகள் திரும்பபெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அனைத்து நாடுகளுக்கான விமான சேவையை இந்திய அரசு தொடங்கியிருந்தது. கரோனாவிற்கு எதிரான ஒரேஆயுதம் தடுப்பூசியே' என்பதன் அடிப்படையில் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம்கள் வந்தது.

Advertisment

இந்நிலையில் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோர்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகள் மூலம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனியார் மையங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுவதால் தடுப்பூசியின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது.

Advertisment

Medical
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe