இயல்பை மீறிய மும்பை!! மேலும் கனமழை நீடிக்க வாய்ப்பு ??!!

மும்பையில் பெய்துவரும் கனமழையால் மும்பை நகரமே மழை வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து மழைபொழிந்து வருவதால் மும்பையில் பல நகரங்களில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் ரயில் போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது. அநேக ரயில் நிலையங்களில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால்புறநகர் செல்லும் ரயில்கள் தாமதமாகவும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுமிருக்கின்றன. மேலும்பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

mumbai

mumbai

mumbai

mumbai

எங்கும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து சேவையிலும் மந்தம் ஏற்பட்டதால் மும்பைமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பால்கர் மாவட்டம் வசாய் நகரில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறமுடியாத சூழல் உருவாகியுள்ளது.

அதேபோல் மும்பையில் டப்பாவாலாக்கள் தங்களதுசேவையைஇன்றுநிறுத்திகொண்டுள்ளனர். இந்நிலையில்நாளையும் தொடர்ந்து கனமழை நீடிக்கும்என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

flood Mumbai rain weather
இதையும் படியுங்கள்
Subscribe