Advertisment

அனில் அம்பானி மீது கட்டாய நடவடிக்கை எடுக்க மும்பை உயர்நீதிமன்றம் தடை! 

Bombay High Court prohibits taking compulsory action against Anil Ambani!

Advertisment

வரி ஏய்ப்பு வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி மீது கட்டாய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என வருமான வரித்துறைக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்விஸ் வங்கியில் அவரது பெயரில் உள்ள இரண்டு கணக்குகள் குறித்த விவரங்களை உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மறைத்ததாகவும், அதனால் 420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும் அனில் அம்பானி மீது வருமான வரித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.இந்த வழக்கில் நவம்பர் 17- ஆம் தேதி வரை அவர் மீது எந்தவித கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் அவர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யவும் தடை விதித்தது.

reliance
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe