
புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு ஆறாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே புதுச்சேரியில் முதலமைச்சர் அலுவலகம், முதலமைச்சரின் வீடு, ஆளுநர் மாளிகை, ஜிப்மர் ஹாஸ்பிடல் என பல இடங்களுக்கு ஈமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. ஆனால் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சோதனையில் அவை புரளி என்பது தெரிய வந்தது.
மிரட்டல் விடும் மர்ம நபரை பிடிக்க முடியாமல் புதுச்சேரி மற்றும் மத்திய சைபர் கிரைம் போலீசார் திணறி வரும் நிலையில் இன்றும் புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு விரல் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு ஏற்கனவே கடந்த ஏப்ரல் 14 மற்றும் 22, மே 13 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இன்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் மோப்ப நாய் உதவியுடன் ஆளுநர் மாளிகை வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.