Advertisment

'மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்'-திருப்பதியில் பரபரப்பு

'Bomb threat again' - excitement in Tirupati

அண்மையாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் விமானங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று திருப்பதியில் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விட்டதால் அதில் தங்கி இருந்தவர்கள் நள்ளிரவில் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சில தனியார் ஹோட்டல்களுக்கு நேற்று இரவு போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் பெயரில் குறிப்பிட்டு ஒரு இமெயில் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ஹோட்டல்களின் உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட ஹோட்டல்களில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட போலீசார் மோப்ப நாய்களுடன் சென்று சோதனை செய்தனர்.

Advertisment

இந்த தகவல் அங்கு தங்கியிருந்த பக்தர்களுக்கும் பயத்தை ஏற்படுத்த அவர்கள் அலறியடித்துக்கொண்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்தனர். போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று தெரிய வந்தது. இந்நிலையில் திருப்பதியில் உள்ள மூன்றுதனியார் ஹோட்டல்களுக்கு ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பு பெயரில் இமெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்த போலீசார் மீண்டும் சோதனையில் இறங்கியுள்ளனர். இரண்டாவது முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால்மத்திய அரசின் உதவியை ஆந்திர போலீசார் நாடியுள்ளனர்.

police Tirupati
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe