/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajini333_0.jpg)
கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வரும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அமிதாப் பச்சனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதேபோல் நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனுக்கு மட்டும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கரோனா பரிசோதனை முடிவில் அபிஷேக் பச்சனின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யாராய் மற்றும் அவர்களின் மகளுக்கு கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மும்பை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமிதாப்பச்சனிடம் தொலைபேசி வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார். அப்போது அவருடைய உடல்நலம், மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிந்ததாக என்று தகவல் கூறுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)