குவைத் விமான நிலையத்தில் குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 777 விமானத்தின் சக்கரத்தில் சிக்கி கேரளாவை சேர்ந்த ஆனந்த் ராமச்சந்திரன் (34) உயிரிழந்தார். இதனால் இவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்நதுள்ளனர். இவர் திருவனந்தப்புரத்தை சேர்ந்தவர் ஆவர். குவைத் ஏர்வேஸில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றியவர் ஆனந்த் ராமச்சந்திரன். அதனைத் தொடர்ந்து விபத்து நடந்த விமான நிலையம் சர்வதேச குவைத் விமான நிலையம் ஆகும்.

KUWAIT

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த விபத்து நடக்கும் போது விமானம் காலியாக இருந்ததாகவும் , 4-வது முனையத்திலிருந்து விமானத்தை அதன் நிறுத்துமிடத்துக்கு எடுத்துச் சென்ற போது விமானத்துக்கு அருகில் ஆனந்த் ராமச்சந்திரன் நின்று கொண்டு அதனை எடுத்துச் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த போது விமான சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானதாக குவைத் ஏர்வேஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவரது உடல் நாளை அவரின் சொந்த ஊருக்குக்கு கொண்டு வர உள்ளது. மேலும் விமான விபத்தில் உயிரிழந்த ஆனந்த் ராமசந்திரனுக்கு மனைவி சோபினா மற்றும் மகள் நைனிகா ஆனந்த் உள்ளனர். இந்த சம்பவத்தால் ஆனந்த் ராமச்சந்திரனின் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே போல் விபத்து நடந்தது குறித்து குவைத் ஏர்வேஸ் நிறுவனம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.