Advertisment

பாடிகார்ட் பவுன்சர்கள் - 'தக் லைஃப்' கொடுக்கும் தக்காளி

அத்தியாவசியப் பொருட்களின் திடீர் திடீர் விலையேற்றங்களின் பொழுது சில சுவாரசிய சம்பவங்களும் நிகழ்கிறது. அந்த வகையில் அண்மையில் விலையேற்றத்தில் சிக்கியுள்ள தக்காளி சோசியல் மீடியா பாஷையில் சொன்னால்தக் லைஃப்புகளை கொடுத்து வருகிறது. தமிழகம்மட்டுமல்லாது வேறு சில மாநிலங்களிலும் தக்காளி விலையேற்றத்தை கண்டுள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் எல்லை மீறி போயுள்ளது தக்காளி விலை. இதனால் கடையின் உரிமையாளர் ஒருவர்இருபவுன்சர்களை பாதுகாப்பிற்குநிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் பவுன்சர்களை பாதுகாப்பிற்கு நிறுத்திய சம்பவம் என்பது விலையேற்றம் குறித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நடத்திய நூதன போராட்டம் என அறிந்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

அதேபோல் சோசியல் மீடியாக்களில் தக்காளி தொடர்பான மீம்ஸ்கள் பஞ்சமில்லாமல் பறந்து வருகின்றன. இதற்கு முன்பு சில ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் வெங்காயம் விலையேறி அனலைக் கூட்டியது. எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வது குறித்து பரபரப்பாக செய்திகள் வெளியாகின. திருமண விழாக்களில் ஒரு கிலோ வெங்காயத்தை மணமக்களுக்கு பரிசளித்து நண்பர்கள் சர்ப்ரைஸ் கொடுத்தனர். இப்படி வெங்காய விலையேற்றம் முடிந்த நிலையில் தனது பங்கிற்கு இன்னிங்க்ஸை துவங்கியுள்ளது தக்காளி.

Advertisment

VIRAL MEMES higher price tomato
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe