Advertisment

கங்கை நதிக்கரையில் இரண்டாவது நாளாக மிதந்த சடலங்கள் - பீதியில் உள்ளூர்வாசிகள்!

ganga

இந்தியாவில் கரோனாபரவல் மோசமடைந்துள்ளநிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கரோனாவைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில்நேற்று பீகாரின் பக்ஸர் பகுதியில், கங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

இது பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியது. அதேநேரத்தில்பீகார் மாநில அதிகாரிகள், இந்த சடலங்கள் உத்தரபிரதேச மாநிலத்திலிருந்துநீரில் விடப்பட்டிருக்கலாம் என்றும், பீகார் மக்களுக்கு சடலங்களை நீரில் விடும் பழக்கம் இல்லை என தெரிவித்தனர்.

Advertisment

இந்தநிலையில்உத்தரபிரதேச மாநிலத்தின்காசிப்பூர் பகுதியில், கங்கை ஆற்றில் இன்று சடலங்கள் மிதந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சடலங்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுடையதாகஇருக்கலாம்என்றும், கரோனாவால்இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் வசதிகள் கிராமப்புறங்களில் இல்லாததால், கரோனாபரவல் அச்சத்தில் சடலங்கள் ஆற்றில் விடப்பட்டிருக்கலாம்என சந்தேகிக்கப்படுகிறது.

கங்கையில் சடலங்கள் மிதந்து வருவது ஆற்று நீரில் இருந்து தங்களுக்கும் கரோனா பரவிவிடுமோஎன்ற அச்சத்தைஉள்ளூர்ர்வாசிகளுக்குஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என காசிப்பூர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்கூறியுள்ளார்.

Bihar corona virus ganga uttarpradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe