உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் அடுத்த மாதம் 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

Advertisment

bobde may become cji

பதவிக்காலம் முடிய ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டேவை நியமிக்க கோரி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ரஞ்சன் கோகாய் பரிந்துரையை சட்ட அமைச்சகம் பரிசீலித்த பின்பு, அதன் முடிவு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். 2021 ல் தான் பாப்டே ஓய்வுபெற உள்ளார் என்பதாலும், சீனியாரிட்டியில் 2 வது இடத்தில் உள்ளதாலும் அடுத்த தலைமை நீதிபதியாக வர பாப்டேவுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.