Advertisment

சிறுநீர் கழிக்கபோன சில வினாடிகளில் பிஎம்டபிள்யூ காரை ஆட்டைய போட்ட திருடர்கள்!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் நிஷப் அரோரா. இவர் தன்னுடைய நண்பர் ஒருவருடைய பிஎம்டபிள்யூ காரை கடந்த சில வாரங்களாக தன்னுடைய சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மற்றொரு நண்பர் ஏற்பாடு செய்திருந்த மது விருந்திற்கு காரில் சென்ற அவர் வயிறு முட்ட குடித்துள்ளார். இரவு பத்து மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பிய அவர், சாலையில் போகும் போது திடீரென சிறுநீர் வந்ததால், ரோட்டோரமாக வண்டியை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துள்ளார்.

Advertisment

H

அந்த நேரம் அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவருக்கு தெரியாமல் காரை திருடி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பொடி நடையாக காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய காவலர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவருக்கு முதலில் அபராதம் விதித்தனர். மேலும் அவரின் காரை திருடியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களுடைய நண்பர்கள் யாராவது இந்த செயலை செய்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலிசார் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளார்கள்.

Advertisment
car
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe