Advertisment

கண் அயர்ந்த பேருந்து ஓட்டுநர்; 15 ஐயப்ப பக்தர்கள் காயத்துடன் மீட்பு

the blind bus driver; 15 Ayyappa devotees rescued with injuries

கர்நாடகாவில் இருந்து சபரிமலை நோக்கி ஐயப்ப பக்தர்களை அழைத்துச் சென்ற பேருந்து ஓட்டுநரின் தூக்கத்தால் பேருந்துகவிழ்ந்து 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Advertisment

கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து சுமார் 40 ஐயப்ப பக்தர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று சபரிமலை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை பம்பை அருகே எரிமேலி சாலையில் பேருந்து சென்றது. அப்பொழுது ஆபத்தான வளைவில் கண் அயர்ந்த பேருந்து ஓட்டுநர், பேருந்தை சடாரென திருப்பியதில் பேருந்து நடுசாலையிலேயே கவிழ்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சில மணி நேர மீட்புப் பணிகளுக்குப் பிறகு சுமார் 15க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் காயத்துடன்மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

police karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe