Advertisment

முதல்வர் மேடைக்கு அருகே குண்டு வெடித்து பரபரப்பு!

The blast near the Chief Minister's stage caused a stir in bihar

Advertisment

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் மேடைக்கு அருகே குண்டு வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

The blast near the Chief Minister's stage caused a stir in bihar

பீகார் மாநிலத்தின் நாளந்தா மாநகரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்றார். இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுப் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அந்த கூட்டத்தில் அவர் பேச இருந்த மேடைக்கு அருகே திடீரென குண்டு வெடித்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை பத்திரமாக அந்த இடத்திலிருந்து கூட்டிச் சென்றனர். கூட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வீசியதாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார், இது தொடர்பாக அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police Bihar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe