
ஜம்மு விமான நிலையத்தில் தொழில்நுட்ப பகுதியில் குண்டு வெடித்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டு வெடித்த சத்தம் கேட்டதையடுத்து குண்டு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விமான நிலையத்திற்கு அருகே உள்ள நார்வால் பகுதியில் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஐந்து கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக முதற்கட்டமாக காவல்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow Us