/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/05_18.jpg)
மேற்கு வாங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் நடத்திய பேரணியில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்தும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தும் சிட்டல்குச்சி என்ற இடத்தில் பாஜகவினர் பேரணி நடத்தினர். அப்போது அந்த கூட்டத்தினர் மீது சிலர் கற்களை வீசி தாக்குதலை நடத்தினர். மேலும் நாட்டு வெடிகுண்டுகளையும் கூட்டத்தினர் மீது வீசி தாக்குதலை நடத்தினர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் பேரணியில் பங்கேற்ற பாஜகவினர் ஆங்காங்கு சிதறி ஓடினர். மேலும் பேரணியில் பங்கேற்றவர்களில் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பாஜகவின் கூச்பெஹர் மாவட்ட கட்சி தலைவர் சுகுமார் ராய் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தான் இந்த தாக்குகளை நடத்தியாக குற்றம் சாட்டினார். ஆனால் தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மறுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)