style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
புதுச்சேரியிலுள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியம் சரிவர வழங்கவில்லை. மேலும் 7 -ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அமல் படுத்தபட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆன நிலையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு அமல்படுத்தப்படவில்லை.
தொடர்ந்து அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களை புறக்கணிக்கும் புதுச்சேரி அரசை கண்டித்து அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புறக்கணிக்கும் புதுச்சேரி அரசைக் கண்டித்து ஆசிரியர் தினமான இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை புதுவை தலைமை தபால் அலுவலகம் முன்பாக அனைத்து அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர், ஊழியர் மற்றும் பென்சன்தாரர்கள் "கருப்பு பட்டை" அணிந்து ஆசிரியர் தின புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.