Advertisment

'இனியும் பாஜகவின் காலம்தான்... தமிழ்நாடு, ஆந்திராவை பாஜக கைப்பற்றும்'-பாஜக செயற்குழு கூட்டத்தில் சூளுரை!

publive-image

'நாட்டில் இன்னும் 30 முதல் 40 ஆண்டு காலம் பாஜக காலமாகத்தான் இருக்கும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

Advertisment

பாஜகவின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உட்பட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ''குடும்ப அரசியல், அரசியல் சாதிய வாதம், திருப்திப்படுத்தும் அரசியல் ஆகியவை மிகப்பெரும் பாவங்களாக உள்ளது. இந்தியா பல ஆண்டுகளாக துன்பங்களை அனுபவித்ததற்கு இவைகளே காரணம். ஆந்திரா, தமிழ்நாடு, ஒரிசா ஆகிய மாநிலங்களின் அதிகாரத்தை பாஜக கைப்பற்றும்'' என்றார்.

publive-image

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ''குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது. நீண்ட காலம் இந்தியாவை ஆட்சி செய்த கட்சி தற்போது மிகப்பெரிய வீழ்ச்சியைசந்தித்துள்ளது. கட்சியின் வீழ்ச்சியைக் கண்டு ஏளனம் செய்யாமல் அவர்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். பாஜக தொண்டர்கள் நட்பு யாத்திரை மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்க வேண்டும்'' என்றார்.

Tamilnadu Andrahpradesh amithshah modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe