Advertisment

போதைப்பொருள் வாங்கிய பாஜக இளைஞரணி செயலாளர் - சுற்றிவளைத்து பிடித்த போலீஸார்!

PAMELA GOSWAMI

மேற்கு வங்கமாநிலபாஜகஇளைஞரணிச் செயலாளர் பமீலா கோஸ்வாமி. இவர் தெற்கு கொல்கத்தாவின் நியூ அலிப்பூர் பகுதியில், காரில் போதைப்பொருளோடு கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரதுகாரில்இருந்து கிட்டத்தட்ட 100 கிராம்அளவிலானகோக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்மதிப்பு பல லட்சம் இருக்கும்எனகருதப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து மேற்கு வங்க போலீஸார்,பமீலா கோஸ்வாமிபோதைப்பொருள் வாங்கப்போவதாக முன்கூட்டியே தகவல் கிடைத்ததாகவும், அதற்கேற்றார் போல் பெண் அதிகாரிகள் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு பமீலா கோஸ்வாமியை கைதுசெய்ததாகவும் தெரிவித்துள்ளனர். பமீலா கோஸ்வாமியோடு சேர்த்து அவரது நண்பர் பிரபீர் குமார் மற்றும் பமீலா கோஸ்வாமியின் பாதுகாவலர் ஆகியோரும் காவல்துறையினரால் சுத்திவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கபோலீஸார், மூவர்மீதும்வழக்குப் பதிவுசெய்ததோடு, அவர்கள் போதை மருந்து கடத்தலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா எனவிசாரித்து வருகின்றனர்.

Advertisment

இதுகுறித்து மேற்கு வங்க பாஜகவின் மாநிலசெய்தித்தொடர்பாளர். "இதைப் பற்றி எனக்கு இன்னும் எதுவும் தெளிவாக தெரியாது. இருப்பினும், மருந்து அவர்களின் பையில் இருந்ததா அல்லது திணிக்கப்பட்டதா என்பதும் கவலைக்குரிய விஷயம்" எனத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்சமயத்தில், பாஜகஇளைஞரணிச் செயலாளர் போதைப்பொருள் வழக்கில்கைதுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

west bengal Youth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe