மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்நிலையில் மே 3 ஆம் தேதி வங்க மொழியில் மம்தா பானர்ஜியின் பயோபிக் படமான 'பாகினி' படம் வெளியாவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை எதிர்த்து பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில், மோடி படத்திற்கு எவ்வாறு தற்காலிக தடை விதிக்கப்பட்டதோ அதுபோல மம்தா பானர்ஜி பயோபிக் படத்திற்கும் தேர்தல் வரை தற்காலிக தடை விதிக்கப்பட வேண்டும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.