மகாராஷ்டிரா மாநிலம், தாம்பேலி பகுதியில் உள்ள பா.ஜ.க. பிரமுகருக்கு சொந்தமான கடையிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிகழ்வு மும்பை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'டாஷியா ஹவுஸ் ஃபேஷன்' எனும் துணிக்கடை நடத்திவரும் பாஜக பிரமுகரான தஞ்சன் குல்கர்னியின் கடையில் நடைபெற்ற சோதனையின் பொது கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர் கல்யாண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். அவரிடமிருந்து ரூ .1.86 லட்சம் மதிப்புள்ள 170 வகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.