மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை அமைப்பது தொடர்பாக கடந்த இரண்டுவாரங்களாக இரு கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வருகிற நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்விற்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.

Advertisment

 BJP will not rule in Maharashtra - Maharashtra BJP leader Chandrakant

காங்கிரஸ், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என முக்கிய கட்சிகள் அனைத்திற்கும் மத்தியில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் இன்னும் இழுபறியே நீடித்து வரும் நிலையில் 9 ஆம் தேதியுடன்பாஜக ஆட்சியின்காலம்முடிந்தது.இந்த சூழ்நிலையில் நேற்றுமுன்தினம்மகாராஷ்டிரா முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.

Advertisment

இந்நிலையில் நேற்று மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆளுநர்பகத்சிங் கோஸ்யாரி அழைப்பு விடுத்திருந்த நிலையில்,ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தாலும்சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் பாஜக இருப்பதால் மகாராஷ்டிராவில் நாங்கள் ஆட்சி அமைக்கப் போவதில்லை என மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த்தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஸ்யாரியைசந்தித்த பிறகு, சிவ சேனாவுடன் இணைந்து பணியாற்ற மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் காங்கிரஸ், என்சிபியுடன் சிவசேனா ஆட்சி அமைத்தால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.