Advertisment

பாஜக படுதோல்வி அடையும்..-அரவிந்த் கெஜ்ரிவால்  

பாஜக மீது மக்கள் கோபமாக இருப்பதால் 2019 தேர்தலில் பாஜக படுதோல்வியடையும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Advertisment

Advertisment

பாஜகவின் செயல்பாடுகளின் மீது மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. எங்கள் அரசுக்கு பாஜக இடையூறு ஏற்படுத்துவதால் மக்கள் பாஜக மீது அதிகப்படியான கோபத்தில் இருக்கிறார்கள். அதன் விளைவாக 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்திப்பார்கள் என்று தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சமீபகாலமாக துணை ஆளுநருக்கும், டெல்லி அரசுக்கும் யார் பெரியவர் என்கிற போட்டி நிலவிவந்தது .இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிகார வரம்புகளை வரையறை செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர் டெல்லி அமைச்சரவை முடிவுகளுக்கு உட்பட்டே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Arvind Kejriwal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe