2019 ம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தற்போது வரை இந்திய அரசியல் கட்சிகள் இணையதளங்களில் விளம்பரம் செய்ய ரூ. 3.76 கோடி செலவு செய்துள்ளன என இந்திய வெளிப்படைத்தன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் பாஜக முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதில் மொத்த விளம்பர தொகையில் 32 சதவீதம் பாஜக கட்சியால் செலவழிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில் காங்கிரஸ் சார்பில் மொத்த தொகையில் 0.14 சதவீதம் செலவு செய்து ஆறாவது இடத்தில் உள்ளது. பாஜக 1.2 கோடி ரூபாயும், காங்கிரஸ் 54,000 ரூபாயும் செலவு செய்துள்ளது. இந்த பட்டியலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் கட்சி இரண்டாவது இடத்திலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மூன்றாம் இடத்திலும் உள்ளது.