மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலணியை கையால் எடுத்துப் போட்ட பா.ஜ.க.வின் மாநில தலைவரின் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தெலங்கானா மாநிலத்திற்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்குள்ள உஜ்ஜைனி மகாலட்சுமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, பா.ஜ.க.வின் மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியே வந்த போது, வேகமாக சென்ற சஞ்சய்குமார், அமித்ஷாவின் காலணியை தனது கைகளால் எடுத்து அவரின் கால்கள் அருகே வைத்தார். இதுதொடர்பான, வீடியோ வெளியான நிலையில், 'தெலங்கானாவின் பெருமை' என்ற ஹேஷ்டேக் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.