பாலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையும், பாஜக கட்சியை சேர்ந்தவர், மதுரா மக்களவை தொகுதி உறுப்பினர் ஹேமமாலினி ஆவர், இவர் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராதா ராமன் கோவில் திருவிழாவில் பரதநாட்டியம் நடனம் ஆடி அசத்தினார். இந்த கோவிலில் 'ஜுலான் உட்சவ்' நிகழ்ச்சிக்கு கிருஷ்ணர் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்.பியும், நடிகையுமான ஹேமமாலினி ஆடிய தெய்வீகமான பரதநாட்டியம் மதுரா மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஹேமமாலினியில் பரதநாட்டிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது போன்ற கோவில் பரதநாட்டிய நிகழ்ச்சியில் எம்.பி ஹேமமாலினி தொடர்ந்து பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.