Advertisment

"எதுவும் தெரியாமல் பேசுவதே வழக்கமாகிவிட்டது" - ராகுல் காந்திக்கு பா.ஜ.க. பதிலடி...

bjp slams rahul on comment about border issue

இந்திய வீரர்கள் ஆயுதம் இல்லாமல் எல்லைப்பகுதிக்குச்சென்றது ஏன்? என ராகுல் காந்தி எழுப்பிய கேள்வி குறித்து பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.

Advertisment

கடந்த சில வாரங்களாக லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்த சூழலில், இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் திங்கட்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இரு நாட்டு உறவில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த மோதல் குறித்து கேள்வியெழுப்பிய ராகுல் காந்தி, “இந்திய ராணுவ வீரர்கள் லடாக் எல்லைக்குச்செல்லும்போது ஏன் ஆயுதங்கள் இன்றி அனுப்பப்பட்டார்கள்? நிராயுதபாணியாகச் சென்ற இந்திய ராணுவ வீரர்களைக் கொல்வதற்கு சீன ராணுவத்துக்கு எவ்வாறு துணிச்சல் வந்தது? இதற்கு யார் பொறுப்பு? இந்திய வீரர்களைக் கொன்றதன் மூலம், சீனா மிகப்பெரிய தவறிழைத்து விட்டது" எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

ராகுலின் இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலின்போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. ஆனால், 1996, 2005 இந்திய- சீன ஒப்பந்தங்களின்படி துப்பாக்கி போன்ற வெடிமருந்து கொண்ட ஆயுதங்களை பயன்படுத்தவில்லை" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் ராகுலை விமர்சித்துள்ள பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா, “ராகுலைப் போல் பொறுப்பற்ற ஒரு அரசியல்வாதியை இந்தியா இதுவரை பார்த்ததில்லை. நிராயுதபாணிகளாக ராணுவ வீரர்கள் ஏன் செல்ல வேண்டும் என்று கேட்கிறார் ராகுல், மத்தியில் இவரது கட்சியின் ஆதரவோடு மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி ஆட்சியில் இருந்தபோது இருநாட்டு ராணுவத்தினரும் எல்லையிலிருந்து 2 கிமீ தூரத்துக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. பிறகு மன்மோகன் ஆட்சியிலும் 2005 ஆம் ஆண்டு இதே போல் மீண்டும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. எதுவுமே தெரியாமல் பேசுவதே ராகுல் காந்திக்கு வழக்கமாகி வருகிறது. தேசபக்தி சிறிதும் இன்றி நாட்டையும் ராணுவத்தையும் அவர் அவமதித்துப் பேசி வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

LADAK china
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe