Advertisment

கேரளாவில் கால் பதித்த பாஜக!

BJP set foot in Kerala

Advertisment

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 1.30 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 289 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 236 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழகத்தில் 39 தொகுதிகளில் 38 இடங்களில் திமுக கூட்டணியும், அதிமுக ஒருஇடத்திலும், பாஜக ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி அதிகப்படியான இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி வெற்றியை பதிவு செய்துள்ளார். இதனால் கேரளாவில் வரலாற்றில் முதல் முறையாக மக்களவை தேர்தலில் பாஜக கால் பாதித்துள்ளது.

Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe