பிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடிய எல்.கே.அத்வானி! (படங்கள்)

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் 93- வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள அத்வானியின் வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.

பிரதமரைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினர்.

பின்னர் கேக் வெட்டிய அத்வானி, அந்த கேக்கை பிரதமருக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அத்வானியின் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

birthday lkadhvani PM NARENDRA MODI
இதையும் படியுங்கள்
Subscribe