Advertisment

மயமாகி ஒப்படைக்கப்பட்ட இந்திய சிறுவனுக்கு கரண்ட் ஷாக் அளித்த சீனா? - அதிர்ச்சியளிக்கும் பாஜக எம்.பி!

bjp

சீனா, இந்தியஎல்லையில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் கிராமங்களை உருவாக்கி வருவதுடன், லடாக்கில் பாலம் ஒன்றையும் கட்டி வருகிறது. சீனா, கிராமங்களை உருவாக்கியுள்ள பகுதிகளும், தற்போது பாலம் கட்டி வரும் பகுதியும் நீண்டகாலமாகவே அந்தநாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்துவருவதாக இந்திய அரசு கூறி வருகிறது. அதேபோல் அருணாச்சல மாநிலத்தின் பகுதிகளுக்கு அண்மையில் சீனமொழிப்பெயர்களைச் சூட்டியது.

Advertisment

இந்தநிலையில்மிராம் டாரோன்என்ற 17 வயது சிறுவனைச் சீனா ராணுவம்கடத்திச் சென்றுவிட்டதாக, அம்மாநிலத்தின் பாஜக எம்.பியானதபீர் காவ் கடந்த மாதம் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேநேரத்தில்இந்திய ராணுவம், சீனா ராணுவத்தைத் தொடர்புகொண்டு சிறுவன் மயமானது குறித்து பேசியது. இதனைத்தொடர்ந்து மயான சிறுவன், தங்கள் நாட்டு எல்லையில் இருப்பதைஉறுதி செய்த சீன ராணுவம், சிறுவனை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைப்பதாகத் தெரிவித்தது. இதன்தொடர்ச்சியாகசீன ராணுவம் கடந்த மாதம் 27 ஆம் தேதி,மிராம் டாரோனைஇந்தியாவிடம் ஒப்படைத்தது.

Advertisment

இந்தநிலையில்பாஜக எம்.பி தபீர் காவ், சீன ராணுவம்மிராம் டேரோனுக்குகரண்ட்ஷாக் அளித்ததாகவும், சீனா ராணுவம் தொடர்ந்து மக்களை கடத்தி செல்வதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாகஅவர், "சீன ராணுவம்மிராம் டேரோனைதாக்கி, கரண்ட்ஷாக் அளித்ததாக எனக்கு செய்தி கிடைத்தது.இந்த பிரச்னையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்.இந்த பிரச்சினை மிராம் டாரோனோடு முடிந்துவிடவில்லை. நம் எல்லைப் பகுதிகளில் அடர்ந்த காடுகள் உள்ளன. அங்கு ஊடுருவும் சீனப்படைகள், வேட்டையாடுவதற்கும் மூலிகைகள் சேகரிப்பதற்கும் செல்லும் மக்களைக் கடத்திச் செல்கின்றன. எல்லையை பிரச்னையை தீர்க்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

china
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe