tmc vs bjp

Advertisment

திரிபுரா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. அதற்கு ஒருவருடத்திற்கு முன்பு மேற்கு வங்க திரிணாமூல்காங்கிரஸின் மூத்த தலைவராகஇருந்த முகுல் ராய், பாஜகவில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து திரிபுரா திரிணாமூல்காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த6 பேர் பாஜகவில் இணைந்தனர். இதற்கு முகுல் ராயேகாரணம் என கூறப்பட்டது.

இதன்தொடர்ச்சியாக2018 சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல்கட்சியில் இருந்து பாஜகவிற்கு மாறியவர்கள்சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றனர். இதன்பிறகு திரிபுரா பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. திரிணாமூல் கட்சியிலிருந்து வந்தவர்கள் முதல்வருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.

இந்தநிலையில், சமீபத்தில் முகுல் ராய் மீண்டும் பாஜகவிலிருந்து திரிணாமூல்காங்கிரஸுக்கு மாறினார். இதன்தொடர்ச்சியாக தற்போது திரிணாமூல் காங்கிரஸில் இருந்து பிரிந்தவர்கள் உட்பட ஒன்பது எம்.எல்.ஏக்கள் திரிணாமூல் காங்கிரஸுக்குதாவப்போவதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. முகுல் ராய் இதுதொடர்பாக ஒன்பது எம்.எல்.ஏக்களிடம் பேசிவருவதாக அத்தகவல்கள் கூறுகின்றன.

Advertisment

இதனையடுத்து, பாஜக மத்திய தலைவர்கள், திரிபுரா விரைந்துள்ளனர். அவர்கள் கட்சி தாவப்போவதாக கூறப்படும்ஒன்பது எம்.எல்.ஏக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், அமைப்பு ரீதியான நோக்கத்திற்காக பாஜக மத்திய தலைவர்கள் வந்துள்ளதாகவும், அரசுக்கு ஆபத்து எதுவுமில்லை எனவும்திரிபுரா பாஜககூறியுள்ளது.