Skip to main content

"இராமாயண பல்கலைக்கழகம்...  மா அன்னபூர்ணா கேண்டீன்" - உத்தரப்பிரதேசத்தில் பாஜக வாக்குறுதி!

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

bjp

 

உத்தரப்பிரதேசத்தில் நாளை மறுநாள் (பிப்ரவரி 10) முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் பாஜக உத்தரப்பிரதேச தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

 

பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில், அயோத்தியில் இராமாயண பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க மா அன்னபூர்ணா கேண்டீன் தொடங்கப்படும், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் அளிக்கப்படும், 2 கோடி இளைஞர்களுக்கு இலவச டேப்லட், ஸ்மார்ட்போன் வழங்கப்படும், 60 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பொதுப்போக்குவரது இலவசம் ஆகிய வாக்குறுதிகளையும் பாஜக அளித்துள்ளது.

 

அதேபோல் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தீபாவளியன்றும், ஹோலியன்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும், லதா மங்கேஷ்கர் கலை நிறுவனம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது,மேலும், 'லவ் ஜிகாத்'தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஓர் லட்சம் அபராதமும் விதிக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்