Skip to main content

மணிப்பூரை கேட்கும் எதிர்க்கட்சிகள்; ‘காங். - சீனா உறவை பேசுவோமா’ - அமளியில் நாடாளுமன்றம்! 

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

BJP questioned loksabha about China - congress relationship

 

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து தற்போது வரை முழுவதுமாக நடைபெறவில்லை. நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.  

 

இதனிடையே எதிர்க்கட்சிகள் அனைவரும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் இன்றும் நாளையும் விவாதிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள்(10.8.2023) பிரதமர் மோடி விளக்கமளிக்கவுள்ளார். 

 

BJP questioned loksabha about China - congress relationship

 

இந்நிலையில், அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரை சீனப் பிரச்சாரத்துடன் தொடர்புபடுத்தியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் காங்கிரஸ் கட்சியைச் சாடியுள்ளார். அமெரிக்க கோடீஸ்வரரான  நெவில் ராய் சிங்கம் மற்றும் நீயுஸ்கிளிக் என்ற தனியார் ஊடக இணையதளத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரித்த போது காங்கிரஸ் பாதுகாத்ததாக அவர் குற்றம் சாட்டினார். நீயூ யார்க் டைம் என்ற ஆங்கில பத்திரிக்கையில், நெவில் ராய் சிங்கம் சீன அரசாங்க ஊடக இயந்திரத்துடன் இணைந்து பணியாற்றுகிறார்.  மேலும், உலகம் முழுவதும் அதன் பிரச்சாரத்திற்கு நிதியுதவி செய்து வருகிறார் என்று தெரிவித்திருந்தது.

 

இந்த நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது ட்விட்டர் பதிவில், “ தி நியூயார்க் டைம்ஸ்(The Newyork times) ’ போன்ற செய்தித்தாள்கள் கூட நெவில் ராய் சிங்கமும் அவரது நியூஸ் கிளிக்கையும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) ஆபத்தான கருவிகள் என்று ஒப்புக்கொண்டு, உலகம் முழுவதும் சீனாவின் அரசியல் நிகழ்ச்சி நிரலை ஊக்குவிக்கின்றன.

 

தி நியூயார்க் டைம்ஸ்-க்கு முன்பே, நியூஸ்க்ளிக் என்பது சீனப் பிரச்சாரத்தின் ஆபத்தான உலகளாவிய வலை என்று இந்தியா நீண்ட காலமாக உலகிற்குச் சொல்லி வருகிறது. ஒத்த எண்ணம் கொண்ட சக்திகளின் ஆதரவுடன், நெவில் ராய் சிங்கம் ஒரு சந்தேகத்திற்குரிய இந்திய எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறார். 2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் சட்ட அமலாக்க முகவர் பணமோசடிக்கான வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் நியூஸ் கிளிக்கிற்கு எதிராக விசாரணையைத் தொடங்கியபோது, ​​காங்கிரஸும் ஒட்டுமொத்த இடது தாராளவாத சூழலும் அதைக் காக்க வந்தன.

 

நெவில்லையும், நியூஸ் கிளிக்கையும் பாதுகாப்பது காங்கிரஸுக்கு இயல்பானது. ஏனெனில் தேசிய நலன் அதன் தலைமைக்கு ஒருபோதும் முக்கியமில்லை. 2008ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அதே காங்கிரஸ் கட்சி, சீனத் தூதரகத்திலிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு (ஆர்ஜிஎஃப்) நன்கொடைகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) தனது பெயரை ஆயிரம் முறை மாற்றலாம். கமாண்டியா கத்பந்தனின் கைகளில் தேசம் பாதுகாப்பாக இருக்காது என்பதை மக்கள் அறிவார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

BJP questioned loksabha about China - congress relationship

 

இதையடுத்து நேற்று பாஜக மக்களவை உறுப்பினர் நிசிகாந்த் துபே, காங்கிரஸ் கட்சியினருக்கும், சீனாவுக்கும் தொடர்பு இருக்கிறது. அத்தோடு சீனாவில் இருப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சி உதவி செய்கிறது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதனால் நேற்று மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. 

 

இந்நிலையில், அதனை எல்லாம் அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். அதனால் பாஜகவினர் பதிலுக்கு முழக்கங்களை எழுப்பிய நிலையில், அமளி ஏற்பட்டதை தொடர்ந்து மக்களைவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.