பாஜக எம்.பி களுக்கு பயிற்சி முகாம் ஒன்றை அக்கட்சி தலைமை ஏற்பாடு செய்துள்ளது.

Advertisment

bjp organaise a training program for mps

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தலைமையில் பாஜக எம்.பி.க்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

Advertisment

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் நடைபெறும் இந்த முகாமில், சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது எப்படி? நமோ ஆப்-பை பயன்படுத்துவது எப்படி போன்ற தகவல்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான திட்டங்கள் குறித்தும் பேசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேவும் பாஜக எம்.பி.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் பயிற்சி தரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாமல் பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பேசும்போது தங்கள் தொகுதி மக்களின் பிரச்சினைகளை எப்படி அவையில் முன்வைப்பது என்பது குறித்தும் பயிற்றுவிக்கப்படுகிறது.

Advertisment

இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக ஐடி பிரிவின் தேசியத் தலைவர் அமித் மால்வியா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் உரையாற்ற உள்ளனர்.