இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்துத் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தையும் முடக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், மிக முக்கியமான சட்டம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதால்,நாளையும் (10.08.21), நாளை மறுநாளும் (11.8.21) கண்டிப்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கவேண்டும் எனத் தனது அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பாஜக உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாஜகவின் இந்த உத்தரவால், நாளையும் நாளை மறுநாளும் முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலை பாஜகவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.